Breaking
Mon. Dec 23rd, 2024
– அனா –
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு தங்கலாலான அனைத்து உதவிகளையும் தாங்கள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம் என்று வாழைச்சேனை ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சரமான றிஸாட் பதியுதீன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாழைச்சேனை ஹைராத் ரான்போட் நிருவாகத்திற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கைத்தொழில் வாணிப அமைச்சில் இன்று (12.07.2015) காலை இடம் பெற்ற போதே மேற்படி உறுதிமொழி ரான்ஸ்போட் நிருவாகிகலால் வழங்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபை மற்றும் செயலக பிரிவுகளை உறுதிப்படுத்தல் மற்றும் ஹைராத் ரான்ஸ் போட் நிருவாகத்தின் வளர்ச்சிக்காக ஐஸ் உற்பத்தி ஆலை அமைத்துத் தர வேண்டும் என்றும் நகர அபிவிருத்தியில் வாழைச்சேனை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் முன் வைக்கப்பட்ட கோறிக்கைகளை ஏற்றுக் கொண்ட கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் இவ் விடயங்கள் நிறைவேற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.
கல்குடாத் தொகுதியில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதால் எமது பிரதேசம் அபிவிருத்தியில் பின்தங்கி காணப்பட்டது அவ்வாரான தவருகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கும் பிரதி நிதித்துவத்தை பாதுகாப்பதற்காகவும் ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகத்தினால் இறைவன் துனையுடன் நுறு வீதமான பங்களிப்பினை மேற்கொள்ள தயாராகவுள்ளோம் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட நிருவாகத்தினர் உறுதியளித்தனர்.
வாழைச்சேனை ஹைராத் ரான்ஸ்போட் உறுப்பினர்கள் சார்பாக எம்.எஸ்.அன்வர் தலைமையில் கலந்து கொண்ட குழுவினர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட கட்சியின் உயர் பீட உறுப்பினர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related Post