Breaking
Mon. Dec 23rd, 2024

– அனா –

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரிப்பது என கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் தீர்மாணித்துள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் எச்.எம்.எம்.அரூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
எமது அமைப்பின் விஷேட நிருவாக சபைக்கூட்டம் (25.07.2015) சனிக்கிழமை இடம் பெற்றது இதில் கடந்த காலங்களில் கல்குடாத் தொகுதியில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட அரசியல் தலைமைத்துவமான அமீர் அலியை நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் அவரது வெற்றிக்காக கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் முழு மூச்சுடன் பாடுபடவுள்ளதாகவும் அறிக்கையில்  அமைப்பின் தலைவர் எச்.எம்.எம்.அரூஸ்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post