கல்பிட்டி பிரதேசத்தி்ல் ஏற்பட்டுள்ள அச்ச நிலையினை தொடர்ந்து இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் பொலீஸ் மா அதிபரிடம் வேண்டியுள்ளார்.
கல்பிட்டி பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக மீன் பிடி தொடர்பில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையால் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,பிரதான பாதையினை மறித்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளதையடுத்து கல்பிட்டி புத்தளத்துக்கான போக்குவரத்து இன்மையால் அப்பாவி பொதுமக்களும்,ஏனைய தேவையுடையவர்களும் சிரமங்களை எதிர்கொள்வதால் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு அதைமச்சர் றிசாத் பதியுதீன் பொலீஸ் மா அதிபரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிரேஷ்ட பொலீஸ் மா அதிபர் ரவி விஜய குணவர்தனவிடம் அமைச்சரின் செயலாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தற்போதைய நிலை தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளதுடன்,பிரதேசத்தின் இயல்பு நிலைக்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதன் அவசியத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துரைத்துள்ளதாகவும் கூறினார்.
அதே வேளை இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் செயலளார் கடற்றொழில் நீரியள்வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்களின் பிரத்தியேக செயலாளருடன் தொடர்பு கொண்டு கல்பிட்டி நிலவரம் தொடர்பில் எடுத்துரைத்த போது மேற்படி மீனவர்களுடனான சந்திப்பொன்றை நடத்த தீர்மாணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.