– எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் –
கல்முனை மதரசா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வழமையான பாவனையிலிருக்கும் குழாய்க் கிணற்றிலிருந்து பல தினங்களான இளம் நீல நிறத்தில் நீர் வருவதையறிந்த குறித்த வீட்டின் உரிமையாளர் கல்முனை தெற்கு சுகாதாரப் பணிமனையில் நீரின் மாதிரியை ஒப்படைத்து தெரியப்படுத்தியுள்ளர்.
நீரின் மாதிரியை பரிசோதிப்பதற்காக பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரைக்கும் நீரை அருந்த வேண்டாம் எனவும் உரிய வீட்டார்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை தெற்கு சுகாதாரப்பணிமனையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.றைஸ் தெரிவித்தார்.
இதேவேளையில் குறித்த குழாய்க்கிணறு அமைந்துள்ள வீட்டைச் சுற்றி பரிசோதித்த வேளையில் அந்தப் பகுதியில் எதுவித தொழிற்சாலைகளும் இல்லையெனவும் மேற்பார்வைக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.