Breaking
Sat. Jan 11th, 2025

-ஊடகப்பிரிவு-

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட மகளிர்களுக்கான பொதுக்கூட்டம் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமாகிய கலீலுா் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டாா். அவர் உரையாற்றுகையில் எங்களது முதல் அபிவிருத்தியாக கல்முனை மாநகருக்கு ஓா் மணிக்கூட்டு கோபுரமும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு முன்னால் ஓா் மேம்பாலத்தையும் அமைப்போம். கடந்த ஆட்சியாளர்களால் முடக்கப்பட்ட அபிவிருத்திகளை நாங்கள் அடைவதற்கு இம்முறை எமது கட்சியாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு வாய்ப்பை தந்து பாருங்கள் எனவும் குறிப்பிட்டாா்.

கல்முனை மாநகரிற்கான ஆதிப் அபரல் தையற் பயிற்சி நிலையத்தினையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post