எஸ்.ஏ. கான்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவை ஆதரித்து, கல்முனை பிரபல வர்த்தகரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் சகோதரருமான ஏ.எம்.பைரூஸின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்ற கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் பெரு வெள்ளமாய் அணிதிரண்டிருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
இங்கு பிரதம அதிதியாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இதேவேளை இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் மைத்திரிக்கான ஆதரவை தெரிவித்த நிலையில் அதன் தலைவைர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.