எஸ்.அஷ்ரப்கான்
கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்; நபி வழி திடல் தொழுகை நேற்று திங்கட் கிழமை (06) காலை 6.45 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது. கல்முனையில் வழமைபோன்று பெருந்திரளான ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்ட இத்தொழுகையை மௌலவி முஹம்மட் பிர்னாஸ் நடாத்திவைத்தார்.