Breaking
Thu. Dec 26th, 2024

அஷ்ரப் ஏ சமத்

முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் கல்முனையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்று கல்முனை நகரில் திறந்துவைக்கப்பட்டது.

அதன் பின்னர் 2006ல் அது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொட்டு நீலாவனை வரையிலான 12 கரையோர பிரதேசங்களை உள்ளடக்கி கல்முனை சிட்டி அலுவலகமாகவும் தரமுயர்த்பட்டு இயங்கி வந்தது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவினால் இவ் அலுவலகத்தை மீண்டும் உப அலுவலமாக தரம் குறைக்கப்பட்டு அதன் வருமானப்பகுதி மற்றும் நிதிப்பிரிவுகள் நிர்வாகப் பிரிவுகள் என்பன அம்பாறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக மக்களும் அதிகாரிகளும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கிணர்.

இது தொடர்பாக கடந்த காலங்களில் பல அமைப்புக்கள் பல அரசியல்வாதிகள் எடுத்த நடவடிக்கை சாத்தியப்படவையில்லை. முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவும் அவரினால் நியமிக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் இலங்கையில் 24 மாவட்ட அலுவலகங்களே இருக்க வேண்டும்.கல்முனையில் ஒரு மாவட்ட அலுவலகம் தேவையில்லை. என அதனை தடுத்து நிறுத்தி அம்பாறையுடன் இணைத்தனர்.

வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் இவ்விடயத்தினை கவணத்திற்கொண்டு வந்திருந்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ் பலன்சூரியவை அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடியதன் பயணாக மீண்டும் கல்முனை நகர அலுவலமாக செயற்படுவதற்கும் மீள மாவட்ட அலுவலமாகவும் திறந்து வைப்பதற்கும் இணக்கம் தெரிவித்து அதற்கான கடிதத்தையும் பிரதியமைச்சரிடம் அதிகார சபையின் தலைவர் வழங்கினார்.

Related Post