Breaking
Fri. Jan 17th, 2025

-ஊடகப்பிரிவு- 

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் முடிவுகளில் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது என்று வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் பெஸ்டர் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில்  12 ஆம் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொடர் ஏமாற்றத்தினால் செல்வாக்கு இழந்து போயுள்ள துரோகிகளின் கட்சியால் திட்டமிட்டு விரிக்கப்பட்டுள்ள சதி வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

தமிழ் சகோதரர்களும் முஸ்லீம்களும் தனித்தனியாய் உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள போதுமான மக்களையும் பரப்பையும் கொண்ட பாரிய பிரதேசத்தை அரசியல் பொறியாக மாற்றி, எல்லைகளை கொள்ளை கொடுக்கும் தந்திரத்தை மறைத்து, இனத்துவேசத்தை விதைத்து வெற்றிபெறும் வழமையான சித்து விளையாட்டை, எல்லை வகுப்பிலும் புகுத்தி புதினம் பார்க்கத் துடிக்கும் துரோகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் உத்தியை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.

தமிழ் சகோதரர்கள் அவர்களின் தலைமைகளின் வழிகாட்டலுக்கு இணங்கி ஒற்றுமையாய் ஒரே சின்னத்துக்கு வாக்களிப்பது எனறு தீர்மானித்துவிட்டார்கள். அதில் குறைகாண ஏதுமில்லை.

12ம் வட்டாரத்தை இரு சமூகத்துக்கும் பலபரீட்சையாய் மாற்றி அரசியல் இலாபம் அடைய முனையும் துரோகிகளை மக்கள் துல்லியமாக  அடையாளம் கண்டு, அவர்களின் கட்சியை நிராகரித்து ஒன்றுபட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சின்னமான மயிலுக்கு வாக்களிப்பதென ஓர்மித்து முடிவு செய்துள்ளது மகிழ்சியை தருகின்றது.

என்றாலும் தப்பித்தவறியேனும் உறவுக்கும், நட்புக்கும், வேறேதாயினும் காரணத்துக்காய் மயில் அல்லாத சின்னத்துக்கு அளிக்கப்படும் ஓரிரண்டு வாக்குகளும், அலட்சியத்தின் காரணமாய் செல்லுபடியற்றதாகும் வாக்குகளுடன், பாரதூரமறியாமல் புறக்கணிக்கும் வாக்குகளாலும் ஏற்படப்போகும் பாரிய விளைவை ஞாபகப்படுத்துவதே எனது நோக்கமாகும்.

தனிப்பட்ட முறையில் என்னோடு விருப்பில்லாத காரணத்தாலோ, அல்லது தனிப்பட்ட வகையில் மற்ற வேட்பாளர்களில் உள்ள விருப்பின் காரணமாகவோ ஏற்படும் மிகச் சொற்ப வாக்குச் சிதறல் கூட, கல்முனையின் எல்லைகளை காலாகாலத்துக்கும் மீட்க முடியாத துயரத்துக்கு கொண்டு போய்விடும் என்பதை தயவு செய்து உங்களை சார்ந்தோர் அனைவருக்கும் அறிவுறுத்துங்கள்.

சுமார் 300 தமிழ் சகோதரங்களின் வாக்குகளை மேலதிகமாக கொண்ட இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், எமக்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது என்பது வெறுமனே கட்சியையும், அது சார்ந்த வேட்பாளரையும் தெரிவு செய்யும் விடையமல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். இத்தேர்தலில் சிதறும் ஒவ்வொரு வாக்கும் கல்முனையின் எல்லையை உள்ளீர்த்து வரையும் ஒவ்வொரு கோடுகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் சகோதரர்கள் எமது எதிரிகள் அல்ல. 12ம் வட்டாரத்தை திட்டமிட்டு இரட்டை அங்கத்துவ வட்டாரமாக்கி இரண்டு சமூகங்களுக்கிடையிலும் ஒரு அரசியல் யுத்தத்துக்கு தூபமிட்டு குளிர்காய முயலும் துரோகிகளே எமது எதிரிகள் என்பதை மனங்களில் பதித்தவர்களாய் 100% ஒன்றுபட்டு எமது மண்ணை பாதுகாப்போம்.

இதுவரை ஓரணியில் ஒன்றுபட்டுள்ள பெரும்பாண்மை மக்களுடன் இணைந்து மயிலுக்கு வாக்களிப்பதினூடாகவே இதை சாதிக்கலாம் என்பதை யாரும் கூறி நாம் அறிய வேண்டியதில்லை.

ஆகவே, எமது எல்லைகளை தீர்மானிக்கும் வரலாற்று முடிவை எடுக்கும் பொறுப்பு, 12ம் வட்டாரத்து வாக்காளர்களாகிய உங்கள் கைகளில்தான் தரப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொண்டவர்களாக, உங்கள் வாக்குகளை பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்தி கல்முனையின் எல்லையை பாதுகாக்க உதவிடுங்கள் என்று வினையமாய் வேண்டுகின்றேன் என்றரர்.

Related Post