– எம்.வை.அமீர் –
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் வரலாற்று ஆய்வாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” நூல் அறிமுக விழா எதிர்வரும் 2016.03.18ம்திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெறவுள்ளது.
கட்டார் டோஹா நகரிலுள்ள பிரண்ட்ஸ் கல்சரல் சென்டர் – அல் ஹிலால் என்னும் இடத்தில் மாலை 5.00 மணிக்கு இவ்வறிமுகவிழா இடம்பெறவுள்ளது. கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் (GFK- கட்டார்) இந்நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
நூல் அறிமுகவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நூலாசிரியரான கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கடந்த 15 ஆம் திகதி மாலை கட்டார் பயணமானார்.
“கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” நூல் கடந்த 2015.12.20ம்திகதி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
நூலின் முதலாவது அறிமுக விழா கல்முனையில் கடந்த 2016.01.23ம்திகதி இடம்பெற்றது.
இதன்தொடர்ச்சியாகவே இரண்டாவது நூல் அறிமுகவிழா கட்டாரில் எதிர்வரும்; 18ம் திகதி இடம்பெறவுள்ளது.