Breaking
Sat. Dec 28th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் இரண்டாம் வட்டார வேட்பாளர் ஏ.நெய்னா முகம்மட் புதிய உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை(03-07-2019)இரவு மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா தலைமையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும்,முன்னாள் இராஜங்க அமைச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டதரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சத்தியப்பிமான நிகழ்வை நடாத்தி வைத்தார். ஏ.நெய்னா முகம்மட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கல்முனை மாநகர சபை உறுப்பினராகப் பதவியேற்றார்.

நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக Hon (Dr) SMM. இஸ்மாயில் MP அவர்களும் மற்றும்

சிறப்பு அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உருப்பினருமான கே.எம்.ஏ. றஸாக்(ஜவாத்)கலந்து கொண்டார்.

விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வை.கே.றஹ்மான், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சீ.எம்.முபீத், எம்.ஐ.எம்.அப்துல் மனாப் ஆகியோருடன் கட்சி முக்கியஸ்தர்களும்,உருப்பினர்களும்,ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Post