Breaking
Sat. Nov 16th, 2024

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே தீர்க்க முடியும்.

வேறு எந்தவொரு சக்தியாலும் அதனை மேற்கொள்ளமுடியாது.

காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர். இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி நீக்குவது, வீட்டுக்கு அனுப்புவது, பிரதேச சபைகளைப் பிரித்துக்கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர்.

கல்முனை பிரதேச செயலகம் விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கரஸ் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர்.

அதேவேளை மட்டக்களைப்பு தமிழ் சமூகம் செய்த மிகப்பெரிய அநியாயம் வியாழேந்திரனை எம்.பி.யாகத்தெரிவு செய்தது.

படித்தவர்களை தெரிவு செய்யுமாறு கேட்டபோது படிப்பித்தவர்களை தெரிவுசெய்து விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

Related Post