Breaking
Mon. Dec 23rd, 2024

இன்று கல்லாற்று பாலத்தில் இடம் பெற்ற வாகன விபத்து குறித்து கேள்வியுற்றதும்,தாம் பெரும் அதிர்சியடைந்துள்ளதாகவும், மரணமானவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதகாவும் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் துரித சுகத்திற்குமாக பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

இன்று காலை புத்தளத்திலிருந்த எலுவலங்குளம் ஊடாக பெரியமடுவிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பபட்ட விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் பெரும் கவலையடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு அல்லாஹவின் அருளும்,மன ஆறுதலும் கிடைக்கவும் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்

Related Post