ஆளும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவ்வாறு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொடிகாவத்த – கோஹிலவத்த பிரதேசத்தின் விஹாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
நாங்கள் உண்மையின் இது தொடர்பில் முதலில் மகிழ்ச்சி அடைந்தோம். ஆறு சதவீதமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், எனினும் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால் வெறும் 2 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டார்.