நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அனுரகுமார திசாநாயக்க, அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 5.41 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைச்சாத்தியமற்றது. எனினும், கல்விக்காக முன்னுரிமை கொடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பந்துல குணவர்த்தன, இவ்வாறானதொரு பாரிய தொகையை கல்விக்காக ஒதுக்கினால் எந்தவொரு அரசாங்கத்தினாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏனைய அபிவிருத்தித்திட்டங்களும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.