Breaking
Sun. Dec 22nd, 2024

ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது ,பொறுப்பானது, மகத்தானது ,கண்ணியமானது.கற்பித்தல் அறப்பணியாகும்.அதற்க்கு அர்ப்பணித்தவர்களே ஆசிரியர்களாவர்.ஒரு சமுதாயத்தை ,ஒரு நாட்டை உருவாக்கும் சிற்பிகளும் அவர்களே.   ஒரு நீதிபதி தவறிழைத்தால் ஒருவனை தூக்கிலிடலாம். ஒரு வைத்தியன் தவறிழைத்தால் நோயாளியைக் மரணிக்கச் செய்யலாம்.ஆனால் ஒரு ஆசிரியன் தவறிழைத்தால் ஒரு சமுதாயத்தையே நாசமாக்கலாம்
ஆசிரியர்கள் மாணவ வழிகாட்டிகள். வழிகாட்டி மரம் திரும்பி நிற்க்குமேயானால் வழி நடையில் மாணவர்கள் தோற்றுப்போவர்.

பழம் தரும் மரம் நோக்கிய பறவைகள் போல் இனித்த கரும்பை நோக்கிய எறும்பு போல் நிறைந்த அறிவுடைய ஆசிரியரை நோக்கி மாணவர்கள் ஈர்க்கப்படுவர் . தாஜ்மஹாலை தாங்கி நிற்க்கும் அத்திவார கற்கள் ஆசிரியர்களென்றால் மேலே பளபளக்கும் பளிங்குக் கற்கள் மாணவர்களாவர் .

ஆசிரியரால் கற்பிக்க முடியாது, ஆசிரியரால் முடிந்தது கற்றலில் ஆசையையும், ஆர்வத்தையும்,ஊட்டுவதேயாகும் .அதனால் தான் ஆசிரியர்கள் சமுதாயத்தில் ஏணிகளாக இருக்கின்றனர்.

தூங்கிக்கிடக்கும் எம் சமுகத்திற்க்குக்கு அறிவுக்கண் வழங்க ஆசிரியர்கள் ஆர்வத்தோடும் தியாகத்தோடும்
முன் வருவது அவர்களின் தார்மீகக் கடமையாகும் .

ஆசிரியர்கள் சமுகத்தின் கண்களாவர் . ஏனெனில் எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் .   மாதா , பிதா, குரு
தெய்வம் என்பது முதுமொழியாகும் .

“A STATION MASTER MINDS THE TRAIN,  BUT THE SCHOOL MASTER TRAINS  THE MINDS”

By

Related Post