எனக்கு பிடித்த இரண்டு சமூகங்ளில் ஒன்று உழைக்கும் சமூகம் மற்றையது கல்விக்காக பாடுபடும் சமூகமாகும். உங்களை பொறுத்தரை நீங்கள் அதிகமாக உழைக்கும் பால் பண்ணையாளர்கள். உங்களுடைய உழைப்பை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.
என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மில்கோ பால் பண்ணையாளரின் முதலாம் தரத்திற்க்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் க. கனகராஜா தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போது மேற் கண்டவாறு கூறினார்.
பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இவ்வாறு அதிகமாக சிரமப்பட்டு உழைக்கும் உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்திலே சிறந்த கல்விமான்களாக வர வேண்டும் என கனவு காண்கின்றேன்.
என்னுடைய கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக என்னால் முடியுமான அத்தனை சேவைகளையும் உங்களுக்கு நிச்சயமாக செய்து தருவேன். எனவே உங்களுடைய பிள்ளைகள் இந்த சமூகத்திலே வைத்தியராக,பொறிளியளாளராக,சட்டத்தரணியாக,ஆசிரியராக வர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
உலகத்திலே பிறந்த அனைவரும் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு வாழ வேண்டும். ஏழையாக பிறந்தோம் ஏழையாக வாழ்ந்தோம் ஏழையாகவே மரணித்தோம் என்று இருந்து விடாமல் மரணிக்கும் போது சாதனையாளராக மரணிக்க வேண்டும் என்ற உறுதியை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி கூறினார் “உன் பிறப்பு சம்பவமாக இருக்கலாம் உன் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்”
சரித்திரமாக உங்கள் இறப்பு இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இறந்த பின்பு இவர் வைத்தியருடைய,பொறிலியலாளருடைய,ஆசிரியருடைய தாய் அல்லது தந்நை இறந்து விட்டார் என மற்றவர்கள் கூறுவார்கள் ஆனால் அதுவே சரித்திரமாக அமைகிறது.
நீங்கள் முயற்சி செய்து பாருங்ள் நிச்சயமாக சாதனை படைக்க கூடியவர்களா நிச்சயம் மாறுவீர்கள்.
உழைக்கும் பணத்தில் அதிகமானதை வீண் விரயம் செய்கிறீர்கள் அந்த பணத்தை கொண்டு உங்களது பிள்ளைக்கு ஆங்கிலம்,கணணி போன்ற வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அவர்ளின் கல்விக்கு வித்திடுங்கள்.நீங்கள் படும் கஷ்டங்களை எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளும் படக்கூடாது என பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையான உழைப்பாளிகள். உங்களுடைய உழைப்பை ஒரு நாளும் மில்கோ நிறுவனம் உதாசீனம் செய்யாது.
மில்கோ நிறுவனத்தை பொறுத்தவரை எப்போதும் பால் பண்ணையாளர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும்.மில்கோ நிறுவனத்தை பொறுத்தவரை விலை நிர்ணயம் எப்போதும் உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும்.
எனவே உங்களுடைய உழைப்பை வீணாக்கி விடாமல் அதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த தலைமுறையை உருவாக் வேண்டும் என கூறினார்.
இந் நிகழ்வில் கோட்ட கல்வி அதிகாரி பாலச்சந்திரன், பாடசாலையின் அதிபர் கணேசமூர்த்தி களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத்,பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு கலந்து சிறப்பிந்திருந்தனர்.