Breaking
Mon. Dec 23rd, 2024

– அபூ செய்னப் –

கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது ஆனால் அப்படிப்பட்ட அதிகாரிகள் எமது மாவட்டத்தில் அதிகம்  காணப்படுகிறார்கள்.

 
இதனை நினைக்கும் போது மிகுந்த கவலையாக இருக்கிறது இவ்வாறான அதிகாரிகளின் மோசமான பக்கச் சார்பான நடவடிக்கைகளினால் எதிர்கால கல்விப்பரம்பரையினரான நமது மாணவ செல்வங்கள் மிகப் பிழையான முன்னுதாரணங்களை கற்றுக்கொளவார்கள் இது தொடர்பில் இனியும் பாராமுகமாக இருக்க முடியாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீரலி மிகுந்த விசனத்துடன் கவலை தெரிவித்தார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராவூர் நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்த பரிசளிப்பு விழாஅதன் தலைவர் மரணவிசாரனை அதிகாரி எம். எஸ்.எம் நஸீர் தலைமையில் ஏராவூர் அஷ்ஹர் வித்தியாலத்தில் நடைபெற்றது இதன் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்விதான் ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப வழிவகுக்கிறது தகுதியான கல்வி அதிகாரிகளின் மூலம் மாத்திரமே மிகசிறந்த வழிகாட்டுதல்களை காண்பிக்க முடியும் ஆனால் நமது மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் அரசியல் வாதிகளின் அடிவருடிகளாக அவர்களின்  கூஜா தூக்கிகளாக செயற்படுகின்றனர் இது ஆரோக்கியமான செயற்பாடாக கருத முடியாது மட்டக்களப்பு  மாவட்ட பாடசாலைகள் பற்றிய அவதானத்தையும் கல்வி உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றியும் நானும் எமது மாவட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் மற்றும் பாராளமன்ற உறுப்பினர் செய்யது அலி சாஹிர் மவுலானா ஆகியோர் பாராளமன்றத்தில் கதைக்கவிருக்கின்றோம்.

கல்வி அரசினால் இலவசமாக வழங்கப்படுகிறது கல்விக் கூடங்களில் சிலர் அரசியல் செய்ய முனைகிறார்கள் இது பன்படாத சிறுபிள்ளைத்தனமான போக்காகும் கல்வியில்  மாணவர்களை எப்படி முன்னுக்கு கொண்டு வரலாம் என்று சிந்திப்பதை விடுத்து எங்கே ஒரு கட்டிடம் உள்ளது அதை எப்போது திறக்கலாம் என்று கழுகு கோழிக்குஞ்சுக்காக காத்திருக்கும் கேடுகெட்ட அரசியல் போக்கிலிருந்து இவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும் பதவியும் அதிகாரமும் நிரந்தரமானதல்ல இன்று அமைச்சராக இருப்பவன் இறைவன் நாடினால் நாளை வீட்டில் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் வரலாம் இன்று வீட்டில் இருப்பவன் நாளை உயர்பதவி பெறலாம் அதற்காய் தற்காலிகமாக கிடைத்துள்ள அஅதிகாரங்களை வைத்து ஆட்டம் போடுகின்றவர்கள் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும் கல்வி அஅதிகாரிகளை கைபொம்மையாக உபயோகிக்கின்ற அந்த செயற்பாட்டில் இருந்து அரசியல்வாதிகள் மாற வேண்டும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இல்லாத ஒரு அரசியல் யுகமே நமக்கு தேவை அபிவிருத்தியில் முண்டி அடித்துக்கொண்டு செயற்பட்டால் அதனை பாரட்ட முடியும் ஆனால் இவர்கள் முன் கொட்டிக்கிடக்கின்ற சமூக அபிவிருத்தி பணிகளையும் நமது உரிமைகள் தொடர்பாக பேச வேண்டிய விடயங்கள், காணி உரிமைகள் ,பொலிஸ் அதிகாரம் மற்றும் மீள்குடி ஏற்றம் இவைகளைப்ப ற்றி பேசி போராடி பெற்றிருந்தால் பாராட்டமுடியும் அப்படி இல்லாமல் தனது அதிகாரங்களை கொடூரமாக பாவிக்க நினைக்கின்ற மனோபாவம் ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல இது தொடர்பில் விரைவில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து தீர்க்கமான முடிவினை எடுக்கவுல்லோம் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார் 
 
இன்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ், முன்னாள் அமைச்சர் பஸீர்சேகு தாவூத் இன்னும்  மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்

By

Related Post