இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இல் நிலவும் பொது மற்றும் விசேட சேவை பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை நேற்று முந்தினம் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை கல்வி நிர்வாக தரம் 3 இல் நிலவுகின்ற 852 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையான உத்தியோகத்தர்களிடமிருந்து மூன்று முறைகளில் ஆட்சேர்க்க விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை, திறந்த பரீட்சை மற்றும் சேவை அனுபவ தகைமை அடிப்படையிலான பரீட்சைகள் மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
இதில் திறந்த போட்டிப் பரீட்சை கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை கடந்த வாரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. எனவே சேவை மூப்பிற்கான பரீட்சையே எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.