Breaking
Mon. Dec 23rd, 2024

களனிவெளி பாதையில், அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயில், கொஸ்கம-மிரிஸ்வத்த எனுமிடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளது.

பெட்டியொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என்றும் இதனால் 20-30 சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

தடம்புரண்ட ரயில் பெட்டியை, தண்டவாளத்தில் நிறுத்தும் வரையிலும் அப்பாதையின் ஊடாக ரயில்சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அக்கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

By

Related Post