அஸ்ரப் ஏ சமத்
இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக பணிப்பளரும் ஊடகப் பேச்சாளருமான – மகேசினி கொலோன் இன்று ஊடக மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கிடங்கு கொண்ட கொள் கலனை உக்ரைனுக்கு கொண்டுவருவதற்கு கடந்த வாரம் முயற்சித்துள்ளார். இந் நடவடிக்கையை வெளிநாட்டு அமைச்சினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இவர் உலகில் எந்த நாடுகளில் இருந்தாலும் அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. என இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடக பணிப்பளரும் ஊடகப் பேச்சாளருமான – மகேகினிசி கொலும் இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
இவர் ரசியாவின் முன்னாள் தூதுவராகக் கடமையாற்றியுள்ளார். புதிய அரசினால் இவரது தூதுவர் இடைநிறுத்தப்பட்டது. ஆனால் இவர் இதுவரை ராஜதந்திர கடவுச்சீட்டை வெளிநாட்டு அமைச்சுக்கு சமர்ப்பிக்க வில்லை. இந்த கடவுச் சீட்டை பயன்படுத்தியே இவர் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்.
அத்துடன் இவர் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கிடங்கு கொண்ட கொள் கலனை உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கு கடந்த வாரம் முயற்சித்துள்ளார்.
அதற்காக ஈரான நாட்டில் உள்ள ஒருவரை தெஹ்ரான தூதுவரலாயம் ஊடாக பவர் ஓப் அட்டோனி வழங்கி கொழும்பில் உள்ள ஆயுதக் கொள்கலனை உக்குரைன் அல்லது வேறு நாடுகளுக்கு கொண்டுவருவதற்கும் முயற்சித்துள்ளார். அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை தெஹ்ரானில் உள்ள தூதுவரலாயத்தில் விசாரனை மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்விடயம் சம்பந்தமாக இலங்கை இந்தியா நாடுகளுக்கான உக்ரைன் தூதுவர் இலங்கை வரவழைக்கப்பட்டு வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கடந்த வாரம் சந்திப்பொன்றும் இடம் பெற்றது. உக்குரைன் நாட்டில் 19 பேர் கொண்ட நிறுவனத்துக்கே இந்த ஆயுதக் கொள்கலன் வியாபாரம் நடைபெற்றுள்ளது. இது பற்றி உரிய விசாரனைக்கு ஒத்துழைப்பதாக வெளிநாட்டு அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்குள் அவர் மேற்கொண்ட மற்றுமொறு ஆயுதக் கொள்கலனே கொழும்பு துறைமுகத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இருவர் விசாரனை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திர கடவுச்சீட்டு இலங்கையின் குடிவரவு திணைக்களத்தினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் இவர் எங்கு உள்ளார் என்பது பற்றியும் இவரது தொலைபேசிகள் தொடர்புகள் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் ஈமெயில் ஊடாகவே தனது இராஜதந்திர கடவுச் சீட்டை ஒப்படைக்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால் இவருக்கு ஏதோ ஒரு நாட்டில் இரட்டைப் பிராஜா உரிமை இருக்கக் கூடும்.
இவர் ஏற்கனவே கடந்த வாரம் தூபாய் நாட்டில் இருந்துள்ளார். 2006ஆம் ஆண்டில் எம்.ஜ.ஜி. 27 என்ற விமாணங்களை கொள்வனவு செயவதில் 10 மில்லியன் அமேரிக்க டொலர் மோசடி செய்துள்ளார். அத்துடன் இலன்டனில் போலியான ஒரு கம்பனயை பெயரைப் பயன்படுத்தியே இவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். நிதிமோசடி பொலிஸ் பிரிவு ஏற்கனவே இவர் பற்றிய முறைப்பாடு உள்ளன. இது பற்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.