Breaking
Sun. Dec 22nd, 2024

– களுத்துறை  செய்தியாளர் –

மக்கா, ஹரத்தில் மறைந்த மர்ஹூம் சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் ஞாபகார்த்தமாக நடைபெற்ற 66 நாடுகளிலிருந்து 224 மாணவர்கள் பங்கு கொண்ட உலகளாவிய ரீதியில் நடைபெற்ற கிராத் போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்ற களுத்துறை ஹில்ரியா அரபுக் கல்லூரியின் 17 வயது மாணவர் அல்-ஹாபிழ் முஹம்மத் நஸ்லின் நவாஸ் இற்கு கடந்த 20/11 அன்று களுத்துறை ஹிலிர் ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் பின் பாராட்டு விழா இடம்பெற்றது.

மக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையிலிருந்து 3 பேர் தெரிவு செய்யப் பட்டனர்  இதில்  அல்-ஹாபிழ் முஹம்மத் நஸ்லின் நவாஸ் உலகளாவிய ரீதியில் 4ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். மேலும், இம் மாணவர்களின் பயண அனுசரணையை  இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

AoxTVvh3Q6iXJ7thr_o0_NYqsaFG68TqW7cHksWk1vsF

AmAil1Vul3YTTVWafoGnLIRTce7K9dpvx5_7sszReizu

By

Related Post