இந்தியாவில் தமிழக தேர்தல் களத்தில் இலங்கை கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலிலதா ஜெயராம் கடந்த தினம் அறுப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கச்சத்தீவின் அதிகாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கமே இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அத்துடன் கச்சத்தீவினை மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தமிழக முதல்வர் ஜெயலிலதா கூறியதை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துள்ளது.
கச்சத்தீவானது, தமிழகத்தில் அவசரகாலநிலைமை அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும், இதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எவ்வித சம்மந்தம் இல்லை என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிதி செயலாளர் எம்.கே.ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.