Breaking
Sun. Dec 22nd, 2024

காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் கழுகு ஒன்றை உயிருடன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே குறித்த சந்தேகநபர்கள் பற்றிய தகவல் வெளியாகிவுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் ஈவிரக்கமில்லா மனிதர்கள் சிலர், கழுகு ஒன்றின் தோலை உரித்து, அதன் கால்களை வெட்டிக் கொல்ல முயலும் கட்சியின் புகைப்படமொன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post