Breaking
Wed. Nov 27th, 2024

மன்னார் மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி கட்டாக்காலிகளாக திரியும் கழுதைகளை முறையாக பராமரித்து, அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று மன்னார் தாய்லாந்து குடியிருப்பு சின்னக்கரிசலில் நேற்று (21)ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்தார்.

மேலும், பிரதம அதிதியாக பங்குகொண்ட தவிசாளர் உரையாற்றும் போது,

மன்னார் நகர மற்றும் பிரதேச மக்களை சிரமப்படுத்திய இந்த கழுதைகளை முறையாக பராமரித்து மக்களின் சிரமங்களை போக்குவதுடன், மக்களினால் ஒதுக்கப்படும் இந்த இனத்தையும் மக்கள் விரும்பும் ஒன்றாக மாற்றி அதற்கான தனியான பராமரிப்பை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னின்று அல்காதில் மற்றும் ஜெரிமின் போன்றவர்கள் மேற்கொண்டமை பாராட்டத்தக்கதுடன் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் .

33 நாடுகளில் முன்னெடுக்கப்படும் இந்த கழுதைகள் பராமரிப்பகம் மன்னாரிலும் சிறப்பாக செயற்படும் முகமாகவும், மன்னாரை சுற்றுலா வலையமாக மாற்றும் திட்டத்தில் இந்த கழுதைகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு இன்புறும் வகையில் மாற்ற என்னால் என்ன முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியுமோ அத்தனை செயற்பாடுகளையும் செய்து தருவேன் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.

Related Post