Breaking
Sat. Jan 4th, 2025
காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் பாதியளவான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதில் அமைச்சரவையின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக இஸ்ரேல் தேசிய வானொலி குறிப்பிட்டுள்ளது. இதன்படி வெளியுறவு அமைச்சர் அவிக்டர் லிபர்மன், வர்த்தக அமைச்சர் நப்தாலி பென்னட், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிளாட் எர்டன் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சர் யிட்சக் அஹ்ரோனோவிக் ஆகியோரே எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
யுத்த நிறுத்தம் குறித்து ஆரம்பத்தில் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசிக்கும்படி நப்தாலி பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கோரியுள்ளார்.  எனினும் அதனை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் உடன்பாடு குறித்து இஸ்ரேல் சட்டமா அதிபரிடம் அனுமதி பெற்றுள்ளார்.
யுத்த நிறுத்தம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கும் நீதி அமைச்சர் சிபி லிவினி, காசாவில் ஆயுதம் களையப்படும் நிபந்தனையின் அடிப்படையில் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். காசாவை அண்டியிருக்கும் இஸ்ரேல் பிராந்திய கவுன்ஸில்கள் மற்றும் மேயர்கள் யுத்த நிறுத்தத்திற்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

Related Post