காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினருக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு மத்தியில் அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் எனும் பெயரில் நிறுவனம் ஒன்றை அமைக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் மேற்கத்தைய சக்திகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், “வரலாறு தொடர்பில் செயற்பட” நிறுவுவதற்கு இணைக்கம் காணப்பட்டுள்ள நிறுவனங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த சட்டமூல யோசனையில், பாதுகாப்பு படைகளை வேட்டையாட வழங்கப்பட்டுள்ள பிரிவுகள் சில இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.