காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மேலும் இருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த அவ்தாஸ் கெளஷல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அக்மீர் பி.சூஃபி (Ahmer B.Soofi) ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர். ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டி கிரைன் ஆகிய மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழுவை ஜனாதிபதி கடந்த ஜூலை மாதம் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.