காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில், யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.