முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த மோதிரம் ஒன்று நேற்று (28) காணாமல் போனது.
கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கல்யாண வைபவம் ஒன்றில் வைத்து இந்த மோதிரம் காணாமல் போனது.
இந்தநிலையில் கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன.
மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது.
எனினும் குறித்த மோதிரம் சில விநாடிகளில் ஹோட்டல் பணியாளரால் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்த இடம்ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு மஹிந்தவிடம் வழங்கப்பட்டது.
மஹிந்தவின் இந்த மோதிரத்தில் விலையுயர்ந்த மாணிக்ககற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் யானை முடியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மோதிரத்தை கழற்ற முனைந்தார் என்ற அடிப்படையிலேயே கடந்த பொதுத்தேர்தலின்போது அவர் தமது ஆதரவாளர் ஒருவரை தாக்கமுனைந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.