இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் பேசப்பட்டுவந்த ஒருவர் அப்துல் ரஹ்மான் அப்துல் காதர் இவர் யார் என்று நீங்கள் யோசிப்பதற்கு முன்னர் அவர் தான் முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் என்னும் கம்பளை ஏ.ஆர்.அப்துல் காதர் என்பதை சொல்லிவிட்ட கையோடு,அன்னாரின் சுவனத்து வாழ்வுக்காகவும் பிராரா்த்திக்க வேண்டுகின்றேன்.
இன்று அன்னார் இந்த உலகை விட்டு இறையடியெய்திவிட்டார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இலங்கையின் அரசியல் குறிப்பாக ஜக்கிய தேசியக்கட்சியின் மூலம் பாராளுமன்றத்திற்கு கண்டி மாவட்ட மக்களின் பிரதி நிதியாக வந்தவர் தான் மர்ஹூம் முன்னாள் அமைச்சர் காதர் அவர்கள்.1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் மாதம் திகதி பிறந்த அப்துல் காதர் அவர்கள்,அதே மாதம் 3 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் இறையடியெய்தினார்.
கூட்டுறவு அமைச்சராக பணியாற்றிய அப்துல் காதர் சில காலம் சுற்றாடல் துறை பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.
அன்னாரின் மறைவு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளதுடன்,அன்னாரின் சுவன வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டுள்ளனர்.