Breaking
Sun. Mar 16th, 2025

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி

காத்தான்குடியில் இன்று  ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா

காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர் றஹ்மா’ பள்ளிவாசல்இன்று  (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்போது பிரதம அதிதியாக துருக்கி பின் ஜாபிர்அல் கிதாமி அல் உதைமி அவர்களும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்சூரி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதுடன் உள்ளுர் உலமாக்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இப்பள்ளிவாசல் நிர்மானத்திற்கான முழுமையான அனுசரணையை அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனையைச் சேர்ந்த ஜம்இய்யதுல் சஹ்வா அல் கைரிய்யா நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post