Breaking
Fri. Nov 15th, 2024

– ஜவ்பர்கான் –

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தினமென்பதால் பிரதேசத்து முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மாட்டிறைச்சியை உணவாக உண்பது வழமையாகும்.

இவர்களின் இந்த பகிஸ்கரிப்பினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உட்பட காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 28 மாட்டு இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரணிடம் கேட்டபோது இவர்களின் பகிஸ்கரிப்பு தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் பசுமாடுகளை அறுப்பதற்கு நகரசபை தடை விதிக்கிறது இதற்கு எதிராகவே குறித்த கடையடைப்பு நடைபெறுவதாக தெரிவித்தார்.

By

Related Post