Breaking
Sun. Dec 22nd, 2024

ஜுனைட். எம். பஹ்த்

முஸ்லிம்கள் அதிகம் செறிந்துவாழும் நகரங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை ஓரத்தில் மக்களின் பிரதான பயன்பாட்டிலுள்ள வீதியின் அவல நிலையே இச்செய்தி.

கடந்த அரசாங்கத்தினால் இந்நகரத்தில் பல அபிவிருத்திகள் மேற்கொண்ட போதிலும் மக்களின் பிரதான தேவையாக இருக்கும் இவ்வீதியை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது காத்தான்குடி மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நகர மக்கள் மீன்பிடி தொழிலுக்கும்,பொழுதுபோக்குக்கும் மிகப்பிரதானமாக இக்கடற்கரை கானப்படுவதால் இவ் வீதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இவ் வீதியில் குன்றும்,குழிகளும் அதிகமாக காணப்படுவதாலும் வீதியின் சிதைவுகளாலும் இவ் வீதியினால் பயணிப்பது மக்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதுடன் வீதி விபத்துக்களால் ஆபத்தை எதிர் நோக்குகின்றனர் .

இம்மக்களின் பிரதான தேவையாக இருக்கும் இவ் வீதியினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுத்தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (zn)

Related Post