Breaking
Mon. Dec 23rd, 2024
– ஹைதர் அலி –

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மியான்குள வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகள் காரணமாக வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதியால் விவசாயிகள், மீன் பிடியாளர்கள், பன்ணை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரால் இரவு பகலாக பயன்படுத்தக்கூடிய  வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில் இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகளினால் இவ்வீதி பயணிகளின் போக்குவரத்துக்கு தடையாகவுள்ளதோடு, காட்டு யானைகள் இவ்வீதியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை தேடி வருவதினாலும் இவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அச்சத்திற்கு மத்தியில் தங்களது உயிர்களை பனயம் வைத்தவர்களாக அன்றாடம் இவ்வீதியால் சென்று வருகின்றனர்.
இதன் தாக்கமாக 2015.10.28 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 3 மணியளவில் மிளான்குள சந்தியில் வைத்து ஓட்டமாவடி மெளலானா வீதியைச் சேர்ந்த மையன் பாவா ஹனீபா (வயது 57) தனது குடியிருப்பு பிரதேசமான காரமுனை கிராமத்திற்கு செல்லும் வழியில் காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்தார்.
இச்சம்பவத்திற்குரிய காரணம் இரு பிரதேச சபைகளின் முறையற்ற வகையில் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வீதிகளில் குப்பைகளை கொட்டுவதே. அக்குப்பைகளை நாடிவருகின்ற காட்டு யானைகளின் அட்டகாசத்தாலே ஒரு உயிர் இன்று இழக்கப்பட்டுள்ளது.
எனவே இதனை இரு பிரதேச சபைகளும் கருத்திற்கொண்டு இனிமேலும் இவ்வாறானதொரு அசம்பாவிதம் நடக்கா வன்னம் குப்பைகளை பொதுமக்கள் பயணிக்கும் வீதியில் கொட்டா வன்னம் உரிய பராமரிப்புடன் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா…?
 மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக எல்லைக்கிராமத்தில் அரசாங்க அதிபரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விபரம்
இப்படியானதொரு சம்பவம் கடந்த 2015.10.10 ஆந்திகதி சனிக்கிழமை அன்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக எல்லைக்கிராமங்களில் இடம்பெற்று வரும் யானைகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் நிரந்தரமான தீர்வை எட்டுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட செயற்பாட்டின் நடவடிக்கையினாலும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இப்பிரதேசக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாலும் அட்டகாசம் செய்து வந்த யானையை போரதீவுப்பற்று வேத்துச்சேனை  கம்பி ஆறு பிரதேசத்தில்  வைத்து  வனஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர். பிடிபட்ட யானை ஹொறவப்பொத்தானை யானைகள் சரணாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு, அதே நேரத்தில், யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளும் துப்பரவு செய்யப்படதனையும் நாம் அனைவரும் அறிந்தோம்.

By

Related Post