Breaking
Mon. Dec 23rd, 2024

எங்களுக்காக அர்ப்பணித்த மக்களுக்களின் நலனுக்காக நான் என்னையே அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். முழு பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி எங்களுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுத்த பின்னர் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவுடன் கை போட்டு ஒன்றாக விருந்து உண்ணும்  கார்ட் போர்ட் துட்டகை முனு, எதிரணியினர் விசேட நிதி குற்றப் புலனாய்விடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

  மக்களின் பணங்களை கொள்ளையடித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு மே தினக் கூட்டத்தை எவ்வாறு நடத்த முடியும். நாம் என்ன குற்றம் செய்தோம். ஊழல்மிக்க ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தது குற்றமா? என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் மே தின பொதுக் கூட்டம் நேற்று (1) பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13147341_771439476288894_223427792785492024_o 13083169_771656072933901_5201534442994750593_n

By

Related Post