Breaking
Thu. Nov 14th, 2024

நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய அளவிலான அடுக்குமாடி கட்டிடத்தை போன்று வடிவம் உடையது.

அதன் உள் பகுதியில் புகையை உறிஞ்சும் தொழில் நுட்பங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவை ஒரு கால்பந்து மைதான அளவுஉள்ள இடத்தில் 36 மணி நேரத்தில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான மாசுபட்ட காற்றை வெளியேற்றி சுத்தம் செய்து புதிய காற்றாக தருகிறது.

இக்கருவியை அதிக அளவு காற்று மாசுபட்டுள்ள பெய்ஜிங்கில் நிறுவ சீனா முடிவு செய்துள்ளது.

வருகிற செப்டம்பரில் அங்கு இக்கருவி நிறுவப்பட உள்ளது. அதை தொடர்ந்து சீனாவின் மிகப் பெரிய நகரங்களிலும், அடுத்த ஆண்டில் இக்கருவி நிறுவப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

By

Related Post