Breaking
Sun. Dec 22nd, 2024

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாவனைக்குதவாத இனிப்பு வகைகள், போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என்பவையே காலாவதியான நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post