பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம் காலி குளிர்பான பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட சிறு படகு உருவாகியுள்ளது.
எலக்ட்ரீஷியனாக இருக்கும் பாஹா ஒபைட்(25) மற்றும் வக்கீலாக தொழில் செய்யும் மொஹமட் ஒபைட்(25) ஆகியோர் இந்தப் படகை தயாரித்துள்ளனர். 4 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த படகை மீன் பிடிக்கவும், பொழுதுப்போக்காக கடலில் பயணிக்கவும் பயன்படுத்திவரும் இவர்கள் அந்தப் படகில் ஏறி காஸா கடற்கரை பகுதியில் அடிக்கடி ஆனந்த உலா வந்து கொண்டுள்ளனர்.