வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப் பெரும நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மரணமானதையடுத்து பாராளுமன்றத்தில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு அஜித் மான்னப் பெரும நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்ததுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிறிது காலம் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே அவர் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கடுகையில் சபைக்குள் சமூகமளித்தார்.
இருபக்க ஊன்றுகோளுடன் சபைக்குள் நுழைந்த அவரை ஆளும் – எதிர்க் கட்சி எம்.பிக்கள் அருகில் சென்று அவரைத் தாங்கி சபையின் பின்வரிசை ஆசனமொன்றில் அமரவைத்தனர். இதன் பின்னர் அவர் அதே ஆசனத்தில் அமர்ந்தவாறே ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை செவிமடுத்தார்.