Breaking
Fri. Nov 1st, 2024

வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் எதிர்நோக்க கூடிய தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலை 7 மணிக்கும் முற்பகல் 10 மணிக்கும் இடையில் உங்கள் அட்டை அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களியுங்கள்.

வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலத்துக்குள் வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாக்குரிமையினைப் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும் தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

தபால் மூலம் வாக்காளர் அட்டை கிடைத்திருந்தால் அதனையும் வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் .

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தினால் வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயம் அல்ல. உங்கள் அடையாமே கட்டாயம் ஆகும்.

அத்துடன் குறித்த தேர்தலில் 19 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீங்கள் வாக்களிப்பதாயின் அவரது பெயருக்கு பக்கத்திலுள்ள அவரது சின்னத்திற்கு புள்ளடியிட வேண்டும்.

மேலும் இந்த தேர்தலில் விருப்பு வாக்கு அளிப்பது கட்டாயம் அல்ல . அவ்வாறு வாக்களிப்பதாயின் அதிக பட்சம் மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளை அளிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post