Breaking
Mon. Dec 23rd, 2024

கால் நடை பண்ணையாளர்கள் தங்களது தொழிலை நவீன முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதிக வருமானங்களை ஈட்டிக் கொள்ளலாம் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் கல்குடாத் தொகுதி பால் பண்ணையாளர்களுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்கிழமை மாலை மில்கோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

கால்நடைகளை வளர்ப்பதில் தமது மூதாதையர்கள் காட்டித் தந்த வழியிலே இருக்காமல் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தங்களது தொழிலிலும் அபிவிருத்திகளை செய்வதன் மூலம் நாளொன்று இரண்டு லீற்றர் பால் கரப்பதை இருபது லீற்றராக மாற்ற முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், தங்களுடைய பிள்ளைகளின் கல்வி அறிவை மேம்படுத்த பெரிதும் உதவியாக காணப்படும் என்றார்.

இச்சந்திப்பின் போது கதிரவெளி, மாங்கேணி, சித்தாண்டி சோமபுர பால் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

எனவே பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பால் நிலையங்களை திருத்துதல், மேய்ச்சல் தரை பிரச்சனை, நல்ல இன பசு மாடுகள், யானை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கதிரவெளி, மாங்கேணி, சித்தாண்டி சோமபுர போன்ற பிரதேச பால் பண்ணையாளர்கள் பதினொரு பேருக்கு குடும்பத்தில் இடம்பெற்ற சுப நிகழ்வுக்கு நன்கொடையாக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post