திருகோணமலை மாவட்டம் பூராகவும் அண்மையில் கால் நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷ்டங்களை எதிர் கொண்டுள்ளதுடன் தங்களது கால் நடைகள் பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை சந்திக்க நேரிட்டது பண்னை உரிமையாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட மாகாண மத்திய அரசாங்க அமைச்சுக்களிடம் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (03) பணிப்புரை வழங்கியுள்ளார். உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மையில் கால் நடைகளுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக பல மாடுகள் ,ஆடுகள் இறந்துள்ளது. இதனால் பண்னை வளர்ப்பாளர்கள் பாரிய கஷ்டங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா,மூதூர், தோப்பூர்,முள்ளிப் பொத்தானை,கந்தளாய் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கால் நடைகள் இறந்துள்ளன கால் நடைகளுக்கான நோய் காரணமாகவே இவ்வாறு இறப்புச் சம்பவங்கள் அதிகம் இடம் பெற்றதாக மாகாண கால் நடைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. கடந்த ஒன்றரை மாத காலமாக கால் நடைகள் இறப்புச் சம்பவங்கள் திருகோணமலையில் பதிவாகிய நிலையில் தொடர்ந்து வந்தது ஒவ்வொரு பண்ணையாளர்களுக்கும் இரண்டுக்கு மேற்பட்ட என்ற விகிதத்தில் கால் நடைகள் இறப்புச் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டது எனவே பண்னை வளர்ப்பாளர்களின் நலன் கருதி நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வருமாறும் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக கொண்டு செயற்படுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.