காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீரான் ஹாஜி, புகாரி ஹாஜி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியாளர் சசிநத்தன், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலத்தின் அதிபர் பிர்தௌஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் றியாஸ், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சம்மூன், தொளபீக், சனசமூக நிலைய தலைவர் ஜஃபர் , சமுர்த்தி உத்தியோகத்தர் சர்ஜுன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இர்பான் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்று பிரதி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைகள்
1. காவத்தமுனை பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பு
2. ஹிஸ்புல்லாஹ் குறுக்கு வீதிக்கு வடிகால் அமைத்தல்.
3. NPC வீதிக்கு காபட் இடல் போன்ற வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.