Breaking
Fri. Jan 10th, 2025

இரத்­தி­ன­புரி, கஹ­வத்தை – கொட்­ட­கெ­த­னவில் மர்­ம­மான முறையில் கடந்த சனி­யன்று நள்­ளி­ர­வுக்கு பின்னர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த 39 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயின் கொலை தொடர்பில் அவ­ரது 18 வய­து­டைய மகனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

காவத்தை – கொட்டகெத்தென்ன பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெண் கொலை செய்யப்பட்ட சமயத்தில் வீட்டில் அவரது 18 வயது மகன் மாத்திரமே இருந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட 32 வயதான சந்ரானி சுவர்ணலதா என்ற பெண்ணின் சடலம் கொட்டகெத்தென்ன பகுதி ஓடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்த்கது.

கொலை குறித்து விசாரணை நடத்தும் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் சந்தேகநபரை கைது செய்து கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்த அதேவேளை,

பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, இந்தக் கொலை தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடந்துள்ளது என தெரிய வருகிறது.

கைத்தொழில் கல்வி நிறுவனம் ஒன்றில் தொழில் கல்வி படித்துக்கொண்டிருந்த மகனின் காதல் தொடர்பு ஒன்றை பற்றி குறிப்பிட்ட கொலை செய்யபப்ட்ட பெண்னுக்கு அன்று காலை தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் அக்காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளார்.

அத்துடன் தனது காதலிக்கு அன்பளிப்பு ஒன்றை கொடுக்க சுமார் 1500 ரூபா பணம் தேவைப்படுவதாக மகன் வேண்டுகோள் விடுத்துள்ள போதும் தாயார் அதற்கும் எதிர்ப்பை தெரிவித்து வந்ததை அடுத்தே மகன் தாயாரை இரவோடிரவாக கொலை செய்துள்ளது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இரவு நடந்த வாக்குவாதத்தில் மகன் தாரை கத்தியால் தாக்கியுள்ளார். கத்தியால் தாக்கபட்ட தாய் சுய நினைவு இழந்து விழுந்த போது அவரின் உடைகளை அகற்றி பாலியல் தாக்குதல் நடத்தி கொலை செய்தது போல் செட்டப் செய்து அவரின் உடலை அப்புறப்படுத்தி அப்பகுதி ஓடை ஒன்றில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அதேவேளை சந்தேக நபருக்கும் அவரின் காதலிக்கும் இடையில் அன்றைய தினம் சுமார் 250 இற்கும் அதிகமாக தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

Related Post