Breaking
Fri. Nov 15th, 2024

– அபூஷேக் முஹம்மத்-

காஷ்மீர் உயர் நீதிமன்றம் CRPF மற்றும் ராணுவத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி பவுல் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஹுசைன் அக்தர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரிக்கின்றது .

ஏன் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் முட்டிக்கு மேல்
மற்றும் கண் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர் ?

அவர்கள் நமது குடிமக்கள் ஆவர் .பெல்லட்களால் சுடுவதற்கு வானத்தில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் அல்ல .அவர்களை சொந்த நாட்டுமக்களை போல் நடத்துங்கள் ஆனால் நீங்கள் அவர்களை சொந்த நாட்டுமக்களை போல் நடத்துவதில்லை .

இது ஒரு மாநிலத்தின் பிரச்சனை ஆகும் . பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியும் சொந்த மக்களை காயம் ஏற்படுத்தியும் , சிகிச்சை அளிக்க அண்டை மாநிலத்தில் இருந்து மருத்துவர்களை கொண்டு வரும் அவலம் நடக்கிறது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெல்லட் குண்டுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் , நீங்கள் இன்னும் மாற்று ஏற்பாடு செய்யாமல் இருப்பது ஏன்?

நமது பாதுகாப்பு படையினர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள், கலவரங்களை அடக்குவதில் கைத்தேர்ந்தவர்கள் CRPF ஜெனரல் அதுல் கர்வால் பதில் அளித்தார்
அப்படி என்றால் ஏன் பொதுமக்களின் உடலில் முட்டிக்கு மேல் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது ?ஏன் அதிகமான மக்களுக்கு கண் பார்வை பறிபோகியுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி கேட்கையில் .ராணுவ ஜெனரல் பதில் அளிக்க முடியாமல் திணறி உள்ளார் .

சிறந்த முறையில் ஆயுதங்களை கையாள்பவர்கள் மற்றும் சிறந்த வீரர்கள் என்றுநீங்கள் சொல்லும் கூற்றை காகிதத்தில் எழுதி வைக்கலாம், ஆனால் மாநில அரசு கள நிலவரத்தை பார்த்தால் பெல்லட் குண்டுகளால் கடுமையான விளைவு ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

 

By

Related Post