Breaking
Mon. Dec 23rd, 2024
யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்களை வெளியே எடுத்துள்ளதாகவும், மேலும் ஒரு மர்மப்பொருள் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது.

மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த மர்மப் பொருட்களை ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post