ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.
பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை.
பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இல்லாத நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.