Breaking
Sun. Dec 22nd, 2024

-சுஐப் எம் காசிம்

கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை தெரிவித்தார்.17309374_1633470423335813_8806215123594418542_n

கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டத்தில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஹுஸைன் பைலா, டாக்டர் ஹில்மி மஹ்ரூப், மருத்துவ உயர் அதிகாரிகள், பொலிஸ், மற்றும் முப்படையினரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்புக்களின் நிலவரங்களை ஆராய்வதற்காக கடந்தவாரம் இங்கு விஜயம் செய்து நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

இந்த மக்களின் துயரங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமருடனும் நான் நேற்றும் விஷேடமாக சந்தித்து நிலமைகளை எடுத்துக் கூறினேன்.

நாம் வாக்குறுதி அளித்தபடி 2 கண்டைனர்களை வழங்கியுள்ளோம். அத்துடன் எமது இன்னோரன்ன உதவிகள் இன்னும் தொடரும்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் இங்கு வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. அவருக்கு ஊர்மக்கள் சார்பில் எனது நன்றிகள்.

டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணிகளுக்காக அவர் பல்வேறு உதவிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளார். அத்துடன் கழிவகற்றல், குப்பை கூலங்களை வெளியேற்றல், துப்பரவுப் பணிகளுக்காக ட்ரக்டர், துப்பரவுப் பணியாளர்களுக்கான சம்பளம், புகை விசிரும் கருவிகள், கழி உறிஞ்சிகள், ஆகியவற்றையும் தறுவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் உள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். எனினும் மாகாண அமைச்சின் கீழ் இந்த வைத்தியசாலை நிர்வாகம் அமைந்திருப்பதால் மாகாண சபை இதனை விடுவிக்க வேண்டும். இங்கிருக்கும் முதலமைச்சர் ஒத்துழைப்பை நல்கினால் எமது செயற்பாடுகள் இலகுவாக அமையும்.

கிண்ணியா பிரதேச மக்கள் டெங்கு ஒழிப்புப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த மனிதனேயப் பணிகளுக்காக இந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தாமும் சுத்தமாக இருந்து சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே இந்தப் பாதிப்பிலிருந்து நாம் விடுபட முடியும்.

அடிக்கடி டெங்கு நோயின் தாக்கத்திற்கு இலக்காகும் இந்த மக்களுக்கு நிரந்தர விடிவு பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த முயற்சியில் ஊடகத்துறையின் பங்களிப்பையும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் உரையாற்றினார். அதன் பின்னர் அமைச்சர் குழாத்தினார் கிண்ணியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து டெங்கு நோயாளர்களைப் பார்வையிட்டதுடன் மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர்கள் தோப்பூர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நோயாளிகளைப் பார்வையிட்டனர். 17426211_1931102307120040_4658512351657368820_n17362416_1931102297120041_7659727995083659250_n (1)17458065_1633470523335803_7437595680650199961_n 17457777_1207391332708041_3677406985753904449_n

 

Related Post