கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (10) பாடசாலை வளாக மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் கே.எம்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வின் போது பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் இசை வாத்தியத்துடனும் பாரம்பரிய தற்காப்பு கலையுடனும் பெரும் அமோக வரவேற்பளித்தார்கள்.
சபா,மினா,மர்வா என மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
பிரதியமைச்சரின் கரங்களால் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் உட்பட வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன
குறித்த நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், உடற்கல்வி பிரிவின் கிண்ணியா கல்வி வலைய உதவி கல்வி பணிப்பாளர் அக்மல், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட், மகரூ கிராம வட்டார வேட்பாளர் ஹாதி உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து சிறப்பித்தார்கள்.